நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மீது கொலைவெறித் தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.இந்நிலையில், இளங்கோவன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த மர்ம நபர்கள் இளங்கோவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இளங்கோவனுக்கு 12 தையல்கள் போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் […]
4 மாவட்டங்களில் இன்று கமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
திடீர் பிரேக்… ஏரியில் கவிழ்ந்த கார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் (45). இவர் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது செம்மேடு அருகே திடீரென்று டூவீலர் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து கிருஷ்ணகிரி-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள ஏரியில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. மேலும் காரில் பயணத்தை இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.தகவல் அறிந்த நல்லான் பிள்ளைபெற்றால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்து […]
20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு மேட்ரிமோனியில் அருண்மொழி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக நம்பி, அப்பெண் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம், ஆகியவற்றை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அருண்மொழி காணாமல் போயுள்ளார். புகாரின் பேரில் அருண்மொழியை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விசாரணையில், இதுபோல 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் – சிலிண்டர் லாரி மோதி விபத்து…சாலையில் சிதறிய சிலிண்டர்கள்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவண்ணாமலை சாலையில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது. கார் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில் லாரி டிரைவர் லாரியை வேகமாக திருப்பியபோது லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையில் குவியலாக கிடந்தன. சிலிண்டர் வெடிக்காததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த […]