தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உலர்க்களம் கட்டித் தர வேண்டும். தனிநபர் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூபாய் 10 லட்சம் செலவாகிறது இதில் 5 லட்சம் மானியமாக கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது கனமழையால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். […]