ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது குடும்பத்தினர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். சிகிச்சையை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று சோதனையிட்டபோது, பீரோவில் […]

தஞ்சை-வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர்  21-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் தங்க நகைகள், 765 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார், […]

திருச்சியில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகை , பணம் கொள்ளை…

திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.