இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்கிற்கு இண்டிகோ விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. விமான பணியாளர் ஒருவர் கழிவறையில் கடிதம் இருந்ததை கண்டெடுத்தார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக, விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. பயணிகள் […]
பஞ்சாப்: ஒரே நேரத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள 16 முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் அவசர அவசரமாகப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர், மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரச் சோதனைக்குப் […]
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டில்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் […]
சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவசர அவசரமாக வெளியேற்றி போலீஸார் […]
காசி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மவு நிலையத்தில் பரபரப்பு
கோரக்பூரில் இருந்து மும்பை லோகமான்ய திலக் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலால், உத்தரப் பிரதேச மாநிலம் மவு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் முழுமையாக காலியாக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில் மவு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், பாதுகாப்பு முகமைகள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் […]
பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது
சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், கன்னியாகுமரி பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த போது இதுபோன்ற மிரட்டல் வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் […]
திருப்பரங்குன்றம்- மலைமேல் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் தர்கா பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கோர்ட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் தீவிர சோதனை […]
13-வது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 12 முறை இ-மெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் இன்று மாலை கலெக்டர் அலுவலகம் வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது கலெக்டர் அலுவலக முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. […]