மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற படத்தின் 3ம் பாகம் உருவாக்கம்
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தியிலும் 2 பாகங்கள் ரீமேக் செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் 3ம் பாகம் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் மனைவியாக மீனாவும், இந்தியில் ஸ்ரேயா சரணும் நடித்தனர். தற்ேபாது இரு மொழிகளிலும் ‘திரிஷ்யம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகிறது. கன்னடத்தில் ‘திரிஷ்யம்’ ரீமேக்கை ‘திரிஷ்யா’ என்ற பெயரில் 2 பாகங்களாக பி.வாசு இயக்கினார். […]