கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்தியாவில் தங்குவதற்கு எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி அங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து புரோக்கர்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாகத் […]

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

ந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, குஜராத் ஜாகவ் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் பாதுகாப்பு பி.ஆர்.ஓ. விங் கமாண்டர் அபிஷேக் குமார் திவாரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பிரத்யேக பொருளாதார […]