காரைக்குடி அருகே பஸ் விபத்து- 11 பேர் பலி
சிவகங்கை : மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்பங்குடி பாலம் அருகே நேற்று நடந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் அதிவேகத்தில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் அபாய நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். […]
அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 11 பேர் பலி…
சிவகங்கை திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருத்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழத்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]