பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவு நோக்கி இந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், கடலோர காவல் படையினர், கடற்படை கப்பல்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மீன்பிடி படகுகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கின. […]

மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. விபத்தில் சிக்கிய 193 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 13 […]

பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி உத்தரபிரதேசத்தின் ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று கோர விபத்து ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே இந்த விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து […]