பிள்ளையார் நோன்பு விழா.. 1Kg உப்பு.. ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம்

கரூரில் நடைபெற்ற 39-ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது. கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழாவானது 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த 200 பேருக்கும் ஏலம் […]