அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

அமெரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000 மாணவர் விசாக்களும் அடங்கும். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் […]