போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்சத் கொதரி. இவர் ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்தி இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதை நம்பிய இளம்பெண் சமூகவலைதளம் மூலம் அக்சத் கொதரியுடன் பழகியுள்ளார். பின்னர், கடந்த 2024ம் ஆண்டு அந்த பெண்ணுக்கும் அக்சத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதையடுத்து, திருமணத்திற்குப்பின் அக்சத் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பதும் அவர் ஏமாற்றி திருமணம் செய்ததையும் அறிந்த இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அக்சத் தலைமறைவானார். […]