2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பெருமாள். கூலிதொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவிலும் மனைவியிடம் மது குடித்துவிட்டு வந்து சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயப்பெருமாளின் மனைவி தனலட்சுமி தனது இரண்டு குழந்தைகளான தேவா (7 ), நீதி (2) இருவரையும் கைகளில் தூக்கிக்கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது […]