கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவரை, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த +2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து, மாணவரை தாக்கிய 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து […]

மினிபஸ் படிகட்டில் பயணித்த +2 மாணவன் பலி

சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த +2 மாணவர் உயிரிழந்துள்ளார். மினிபஸ் விபத்தில் படியில் பயணித்த சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.