கேரளாவில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை), வருகிற 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]