பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். அடுத்தடுத்து பல கடைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர்.எனினும் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் […]
பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரவீன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்தி (19). இவர் பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி […]
நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்
பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குணா (38). பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (17-ம் தேதி) இரவு வேலை முடிந்து தனது காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணி […]
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரேரோ மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகருக்குத் தென்மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில், 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் நாட்டின் ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், […]
விவசாயத் தோட்டத்தில் விதிமீறல்: பட்டாசு வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தூர் அடுத்துள்ள கே.மேட்டுப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு […]
தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி…
அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி டெம்போ வேனில் புறப்பட்டனர். அப்போது எதிரே ஆந்திராவில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் கார் ஒன்று வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த டெம்போ வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்த […]