தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி
தாய்லாந்தில் கிரேன் விழுந்ததன் காரணமாக ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, “பாங்காக்கிலிருந்து தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்திற்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாங்காக்கிலிருந்து வடகிழக்கே 230 கிமீ தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சீகியோ மாவட்டத்தில் உள்ள பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பெட்டிகளில் ஒன்றின் மேல் கட்டுமான […]