குளித்தலை அருகே தனியார் பஸ்-மினி பஸ் மோதி விபத்து.. 28 பேர் காயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை – மணப்பாறை சாலை வை.புதூர் பகுதியில், இரும்பூதிப்பட்டி பகுதியில் இருந்து குளித்தலை நோக்கி வந்த மினி பேருந்தும், குளித்தலையில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண், 18 பெண்கள் 10 ஆண்கள் என 28 பேர் காயமடைந்துள்ளனர்.அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு […]