வீட்டில் கேஸ் கசிந்து தீ.. 2 வயது குழந்தை பலி

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (32). இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும், அவரது இரண்டு வயது மகன் திருக்குமரனும் மட்டும் இருந்துள்ளனர். நேற்று காலை தனது மகனுக்குப் பால் காய்ச்சுவதற்காக பாரதி அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பாரதியின் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து பாரதி மற்றும் அவரது மகன் திருக்குமரன் […]