மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது
கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு கார்த்திக் தனது வீட்டின் அருகே இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் மது அருந்துவதால் குடும்பப் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதிய கார்த்திக், அவர்களை அங்கிருந்து […]
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தியபோது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (25) என்பவர் புகையிலை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதேபோல், எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் […]
இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தினர் 3 பேர் கைது
கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா சிக்கியது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சர்கார், பாலசு மண்டல், ரோஹித் தாஸ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…3 பேர் கைது
ஒடிசா மாநிலம் ராயகண்டா மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயகண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், நேற்று மதியம் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்தச் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் வைத்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் […]
லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மடத்தூர் பாரத் பெட்ரோலியம் கேஸ் கம்பெனியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது அவர் கம்பெனி வெளியே, சர்வீஸ் ரோட்டில் டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவு 11 மணியளவில் ஒரு வாலிபர் லாரி கதவை தட்டி திறக்க சொல்லியுள்ளார். […]
பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்
பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை நடத்த சென்றபோது தில்லைநகர் பகுதிக்கு உட்பட்ட பாபா டவர்ஸ் சாஸ்திரி ரோடு விஸ்வநாதபுரம் ,உக்கிர காளியம்மன் கோவில் பருப்பு மில் உட்பட்ட 11 மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களில் உள்ள 22 பேட்டரிகள் திருடு போனது தெரிய வந்தது. இதே போல் […]
போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்
போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தனீர்புரம் அருகே போதை மாத்திரை விற்றஇதே போன்று அரியமங்கலம் காமராஜ் நகர் முகமதுஅலி தெருவை சேர்ந்த நஸ்ருதீன் (வயது24), அதே பகுதியை சேர்ந்த அசார்முகமது (வயது26) மற்றும் அரியமங்கலம் மேல […]