குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. காவல் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில் தீவிரவாத தடுப்புப் படையினர் சந்தேகத்துக்குரிய சிலரை கடந்த ஓராண்டாக அணுக்கமாகக் கண்​காணித்து வந்தனர். அப்​போது, ஐஎஸ்​ஐஎஸ் பயங்கரவாத அமைப்​புடன் தொடர்புள்ள மூன்று பேர் குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக […]