தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்

தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அந்த இளைஞர் பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரைச் சுட்டுப்பிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி 3 பேர் படுகாயம்

மராட்டிய மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பென்ஸ் சொகுசு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையின் அக்ரிபடா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 18 வயது பேத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 17 வயது நண்பனுடன் தாத்தாவின் பென்ஸ் சொகுசு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது உரிமம் இல்லாத அந்தச் சிறுவன் காரை ஓட்டியுள்ளார். தெற்கு […]

ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், நேற்று மலோர்கோட்லா சாலை அருகே உள்ள வசித்ரா நகர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் பிரம்மாண்டமான வெற்றி ஊர்வலம் நடத்தினர். அப்போது ஒரு வீட்டிலிருந்து திடீரென வெளியே வந்த 10 முதல் 15 பேர் […]