திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எழுத்தூரில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் கால்வாயில் கவிழ்ந்து 3 இளைஞர்கள் பலி
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 5 பேர், உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை இட்டாக் மாவட்டம் சகித் பகுதியில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் முதலில் சாலையோர மரத்தில் பலமாக மோதி, பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் […]
நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற லாரியும், அந்தச் சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் மீது சரக்கு வாகனம் […]
ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கொள்கலன் லாரி மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த […]
பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி
ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீப்பிடித்ததில் இருந்து தப்பிக்க முயன்ற 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கர்னூல் மாவட்டத்தில் பெங்களூரு–ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் இன்று அதிகாலையில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. காளேஷ்வரம் […]
சென்னையில் அடுத்தடுத்து விபத்து… 3 பேர் பலி
சென்னையில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். பல்லாவரத்தில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது மோதியது. லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணை அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற அருணாச்சலம் (51) என்பவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், பலூன்களுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவிழாக் கோலம் பூண்டிருந்த ஆற்றுப்பகுதி இந்த விபத்தால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மும்பை: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர், ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுமார் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளம் என அனைத்து இடங்களுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் தரைதளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களும், மேல் தளத்தில் இருந்த ஒரு […]
லாரி – கார் மோதல்: முன்னாள் அமைச்சர் மகள் உட்பட 3 பேர் பலி
மத்தியப் பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சரும், ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா பச்சனின் மகள், இந்தூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் பாலா பச்சனின் மகள் பிரேர்னா பச்சன். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இவர்களது கார் இந்தூர் மாவட்டம் ராணாமண்டல் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் […]
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் அஜய் விமல் (45). இவர் தனது மனைவி நீலம் (38) மற்றும் 10 வயது மகள் ஜான்வி ஆகியோருடன் முகுந்த்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். […]