அதிகக் கட்டணம்: 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 18-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளியூர் செல்லும் பொதுமக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட்டாரப் போக்குவரத்து […]