நிதி நெருக்கடியில் வாஷிங்டன் போஸ்ட்: சசி தரூர் மகன் உட்பட 300 பேர் பணிநீக்கம்

அமெரிக்கத் தலைநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’. கடந்த சில காலமாக இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேரை (சுமார் 300 ஊழியர்கள்) பணிநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, விளையாட்டு செய்திப்பிரிவு, சர்வதேச செய்திப்பிரிவுகள் மற்றும் புத்தகப் பிரிவுகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய நிருபர்கள், ஆசிரியர்களும் […]