லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு கார் குவாலியர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பேர் பயணித்தனர். அவர்களில் ஒருவர் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். கார் மகராஜ்புரா என்ற பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் […]
தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்
ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை கடந்து எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று தெரிகிறது.விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக […]
கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உறவினரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இன்று அதிகாலை கோடா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி கார் மீது மோதியது. டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் முன்னே சென்ற கார் மீது மோதி அதன்மீது கவிழ்ந்து விழுந்தது.இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 […]
கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி
தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு […]
20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..
மும்பை-டெல்லி விரைவு சாலையில் இன்று (டிச.15) அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் ஆவர். மேலும், 15 முதல் 20 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!
ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 2:51 மணிக்கு (உள்ளூர் நேரம்) திடீரென பெருந்தீ ஏற்பட்டது. இந்த குடியிருப்பு 8 பிளாக்கள் கொண்டது, 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தீ விபத்து ஒரு பிளாக்கில் தொடங்கி, வெளியில் அமைக்கப்பட்ட பாம்பூ (bamboo) ஸ்கேஃபோல்டிங் மூலம் விரைவாக அனைத்து பிளாக்களுக்கும் […]