மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது
குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சபர்கந்தா, மெஹ்சனா மாவட்ட மக்கள் 5 ஆண்டுகளாக கலப்பட பால், மோரை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட பால் உற்பத்தி செய்து வந்த ஆலை கண்டறியப்பட்டு 5 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. […]
பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது
சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக அளவில் மது அருந்தியிருந்தது போலீசாரின் முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் காரை நிலைதடுமாறி ஓட்டியுள்ளனர். மோதிய வேகத்தில் பெட்ரோல் மீட்டர் பாக்ஸ் அடியோடு பெயர்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தானியங்கி பாதுகாப்பு வால்வுகள் செயல்பட்டதால் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ […]
மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்
சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையைக் கொண்டு வந்து வீசி சென்றது உறுதியானது. கொல்லப்பட்ட […]
போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த 5 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 56 கிராம் எடை கொண்ட மெத்த பெட்டமைன் மற்றும் 4 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து மேற்கண்ட போதைப்பொருட்கள் […]
துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது
திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபு (50). லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் சிக்க வைக்க, தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனையோடு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியோடு போலி ரெய்டு திட்டத்தை செயல்படுத்தினர். கடந்த நவம்பர் மாதம்17ம் தேதி இரவில் துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ 2.50 லட்சத்தை ஒரு மர்ம நபர் மூலம் வைத்து அந்த நபர்களே லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து […]