சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து தூய்மைப் பணிக்காகப் பணியாளர்கள் சிலர் ஜபல்பூர் வந்திருந்தனர். அவர்கள் பரேலா பகுதியில் சாலையோரமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் அந்த கார் […]

சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் நேற்று அமெரிக்காவுக்கு பயணித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்தது.அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]

திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..

ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற போது கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடாமதுரை அல்-மதின் கிராண்ட் ஹோட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த திமுக நகர மன்ற தலைவரின் கார் நேருக்கு நேர் மோதியது. […]

திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். நள்ளிரவு லக்கிம்பூர் கேரியின் சாரதா ஷிப்ஹொன் என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். கார் டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து […]

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் கஞ்புரி ஹிண்டோலக் சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 18 பேர் பயணித்தனர். இந்நிலையில், நரேந்திர நகர் அருகே மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 13 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு […]