திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்தினை காண்பதற்கு லட்சகணக்கானோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபத்தை காண்பதினால் மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெறும் பரணி தீபத்தின் போது […]