திருமணப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஜார்க்கண்டில் 6 பேர் பலி; 80 பேர் காயம்

சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ […]

600 அடிபள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத […]

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து […]