அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல்… 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமலைகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பாப்பாள் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சமையலர் பாப்பாள் மீது சாதிய ரீதியில் தாக்குதலும் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் […]