விதிமுறைகளை மீறி கடமைப் பாதையில் நடந்து சென்ற பிரதமர்

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும், கலாசார செழிப்புடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சமத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் (Kartavya Path) குடியரசு தின கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெற்றன. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ […]

அட்டாரி-வாகா எல்லையில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: விண்ணதிரும் முழக்கங்களுடன் கொடியிறக்க நிகழ்ச்சி

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா பகுதியில் குடியரசு தின சிறப்பு கொடியிறக்க நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள வாகா பகுதியும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி பகுதியும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், இந்த எல்லையில் இரு […]

77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டனர். மேலும் உலகெங்கும் சமாதானம் நிலவ வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]