திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லதா (23). இவருக்கு, பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான சில நாட்கள் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர், லதாவை குருராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தியும், மனரீதியிலான தொல்லைகளும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் லதாவிடம் இருந்து செல்போன் அழைப்பு ஏதும் வராததால், […]