நடிகை ராஷ்மிகா ஆவேசம்.. AI மார்பிங்-க்கு கடும் கண்டனம்
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா , சமீப காலமாகப் பெண்களைக் குறிவைத்து இணையத்தில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்த முக்கிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் உலகில் தற்போது பேசுபொருளாக உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒருபுறம் ஆக்கப்பூர்வமான பலன்களைக் கொடுத்தாலும், மறுபுறம் சில சமூக […]