அரசு கல்லூரியில் 15.75 கோடியில் புதிய கட்டிட பணி.. VSB துவக்கி வைத்தார்

கரூர் அரசு கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கல்லூரி மாணவ மாணவியருடன் இணைந்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், […]

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- VSB துவக்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 18 பள்ளி, கல்லூரியில் இருந்து வந்திருந்த சுமார் 2,000 மாணவ-மாணவிகள், “தலைக்கவசம் அணிவோம், உயிர் காப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் மாநகரின் […]