அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் அஜய் விமல் (45). இவர் தனது மனைவி நீலம் (38) மற்றும் 10 வயது மகள் ஜான்வி ஆகியோருடன் முகுந்த்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். […]
தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு
வல்லம், டிச.24- தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதி 11 ல் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட […]
அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன் தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சஹாஜா […]
ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி
ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் பரவியது.இதில் 5 உயர்ந்த கட்டிடங்கள் முழுவதும் […]