மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது

ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் (47) என்ற விவசாயி, தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் (47), மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க […]

இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் பணத்தை பெற பெருமாள் மகன் சேகர் என்பவர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாவிடம் கையெழுத்திற்காக அணுகி உள்ளார். இதன் காரணமாக கையெழுத்திட சேகரிடம் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூன்றாயிரம் பேரம் பேசியுள்ளார் […]

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சி…அதிகாரி கைது…

தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.