2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரவைக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை, 56 பேர் பலியாகி உள்ளனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், அங்கு நிலைமை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அதன்படி, […]