இணையம் மூலம் பண மோசடி… அரியலூா் அருகே 2 பேர் கைது

அரியலூா் அருகே இணையதளம் மூலம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இலந்தைக்கூடம் கிராமத்தைச் சோ்ந்த சரவணவேல் மகன் சங்கா்கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவரான இவா், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் முகநூல் கணக்கில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் பங்குச் சந்தை குறித்து இலவச வகுப்பு எடுப்பதாகவும், முதலீடு செய்தால் 5 […]

அரியலூர்- தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன் கைது

ஆண்டிமடம் அருகே இருசக்கர வாகனம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை.  இவரது மகன் மணிகண்டன். இவர் எப்போதும் தனது தந்தையிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். நேற்று இரவு இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு தந்தையிடம் வாக்குவாதத்தில் […]

அரியலூர்-காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக தகவல்… வனக்காவலர் மீது தாக்குதல்

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் ஊராட்சிக்குட்பட்ட மருதையாற்றின் அருகே, பழைய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றியை, ஒரு கும்பல் வேட்டையாட முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறை காவலர் விசுவநாதன் என்பவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார். மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வந்த சூழலில், அதில் வேலை செய்த பணியாளர்கள் பொதுப்பணி துறையினர் மூலமாக, வனத்துறைக்கு காட்டுப்பன்றி பழைய கிணற்றில் விழுந்து கிடப்பதாக, தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரிலேயே விசுவநாதன் சம்பவ இடத்திற்கு […]

அரியலூரில் பரபரப்பை கிளப்பிய முட்டை போஸ்டர்

கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று அரியலூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டை என தலைப்பில் குறிப்பிட்டு அதன் கீழே முட்டை படத்தை அச்சிட்டு ‘பாஜக-அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி’ எனும் வாசகங்களுடன் அரியலூரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அரியலூர்- திருச்சி சாலை, அரியலூர் – […]

விருத்தாசலம்- தென் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகரில் வசிப்பவர் பாரதி சத்தியபாமா தம்பதியினர். இவர்களின் இளைய மகள் வந்தனா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக(MBBS) பயிற்சி முடித்து அமெரிக்காவில் உள்ள ரெட்கெர்ஸ் யுனிவர்சிட்டியில் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பு (MD) முடித்துள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் […]

பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து புறப்படுகின்றன பேருந்துகள் அனைத்தும் அவர்களது நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து நிறுத்துவதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் லால்குடி மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடை அருகே திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக […]

அரியலூர்- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்படும் நிலைகள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வேஷ்டி மட்டும் புடவைகள் […]

அரியலூர்- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை சரமாரி தாக்கிய பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை நோக்கி சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக டிப்பர் லாரி, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது. இதில் காயம் அடைந்து ரத்தம் […]

அரியலூர்-பொங்கல் பரிசு-கரும்பு தோட்டத்தினை கலெக்டர்நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (03.01.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2,51,161 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

அரியலூர்- புத்தாண்டு கொண்டாட்டங்கள்… கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]

அரியலூர்-பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மன் தாலிகள் திருட்டு-பரபரப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற சூரியன் ஆண்டுக்கு இரண்டு முறை சிவபெருமானை வழிபடும் தலமான காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிகள் திருட்டுபோன சம்பவம் பெண் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது பசுபதீஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய ஒளி கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு ஒளிவீசுவதால், சூரிய […]

தடகளப் போட்டி-தங்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், உத்திர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எல்.யோபின், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால், 2025-26 ஆம் கல்வியாண்டு, அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டிகள் 13.12.2025 முதல் 17.12.2025 வரை […]

அரியலூர்- ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்..வெள்ளிக்கிழசத்தில் ஆஞ்சநேயர்-தரிசனம்

அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலய நிர்வாகம் சார்பில், அருள்மிகு ஸ்ரீ பக்த அனுமான் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி மஹோஸ்த்தவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 7 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு […]

அரியலூர்- பால் வண்டி மீது மோதிய டிப்பர் லாரி-உயிருடன் சிக்கி தவித்த டிரைவர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் இருந்து செந்துறை வரை, தினந்தோறும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இந்தப் பால் வண்டியை ஓட்டி செல்வார். இன்று காலை டாடா ஏசி பால் வண்டி வாகனத்தை செந்துறை பேருந்து நிலையம் அருகே சதீஷ். ஓட்டி வந்த போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத […]

அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு சாமி வாசனே ஓட்டிச் சென்றுள்ளார். ஏலாக்குறிச்சி ஆர்ச் வளைவு சாலையில் சத்திரத்தேரி முனியாண்டவர் கோவில் அருகே சென்றபோது, காரின்முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து லேசாக புகை வரத் தொடங்கியதை கண்டு, காரை சாலையின் ஓரமாக நிறுத்தி, எஞ்சின் பேனட்டை சாமிவாசன் […]

அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்கள் பெயர் நீக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,52,333. இதில் பெண் வாக்காளர்கள் 1,26,668 பேர் மற்றும் ஆண் வாக்காளர்கள் 1,25,652 பேர். இதர வாக்காளர்கள் 13 அடங்குவர். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,54,189 பேர். இதில் பெண் […]

அரியலூர்- பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் கொள்ளை- பக்தர்கள் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஆலயம் உள்ளது. கோவிலின் சிறப்பு மரகத லிங்கத்திற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகும்.நேற்று இரவு பிரதோஷத்தை கோவில் பூசாரி கலியபெருமாள் சிறப்பாக நடத்தினார். மரகதலிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீபாரதனை மற்றும் ஆராதனை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இரவு கோவில் பூசாரி கலியபெருமாள், கோவிலின் கதவை பூட்டிவிட்டு, கோவி […]

தகாத உறவு.. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அரியலூரில் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்த திருமணம் ஆன ஆண், பெண் இருவரும் தங்களுக்குள் கொண்ட தகாத உறவால் ஊரை விட்டு ஓடியவர்கள், மீண்டும் ஊருக்குள் வந்து காட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்தவர் விஜய் (35). தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று சிறுகடம்பூரை சொந்த ஊராக கொண்டு, சின்னமனக்குடியை ஒட்டியுள்ள நுரையூர் கிராமத்தில் திருமணம் ஆகி […]

மின்மாற்றியில் மோதிய அரசு பஸ்.. அரியலூரில் பரபரப்பு

அரியலூர் மாவட்டம், அரியலூரிலிருந்து சுத்தமல்லி, ஆலம்பள்ளம், காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பஸ் இன்று காலை அரியலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. ஆலம்பல்லம், காசாங்கோட்டை கிராமங்களுக்கு இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்துக்கு வழி விடுவதற்காக அரசு பஸ்சை ஓட்டுநர் ராஜ்குமார், சாலையின் இடது ஓரம் வரை பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மின்மாற்றியில் பேருந்து மோதியுள்ளது. இதனால் […]

ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு

ஜெயங்கொண்டம்  கடைவீதியில் உள்ள தனியார் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). இவர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள ஒரு தனியார்  பாத்திரக்கடை ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். திடீரென காரணம் இல்லாமல் தன்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டதால், தனக்கு வாழ்வாதாரம் ஏதும் இல்லாததால் […]

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரிசெல்வராஜ், 10 ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என்னை டிவியிலிருந்து பேட்டி எடுக்க வருவார்கள் என என் பெற்றோர்களிடம் கூறினேன் ஆனால் 10 ஆம் வகுப்பில் நான் தோல்வி அடைந்தேன். ஆனால் பரியேறும் பெருமாள் வெளியான பின் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்தார்கள் […]

ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது மருதூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் இடது புறமாக இருந்த விஜயலட்சுமி என்பவரது ஓட்டு வீட்டின் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த விஜயலட்சுமி, கார் ஓட்டி வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஊர்க்காவல் படையில் 29 (ஆண்கள்) காலி பணி‌ இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக 105 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு தேர்வு முகாம் நடைபெற்றது. இத்தேர்வு முகாம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயுதப்படை துணைக் […]

ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அதிமுக பொதுக்குழுவில் அதிமுக எவரும் குறை சொல்ல முடியாத சிறப்பான ஆட்சியை நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால் மக்கள் அதிமுகவுக்கு, மீண்டும் அங்கீகாரம் கொடுத்திருப்பர். மக்கள் தூக்கி எறிந்த […]

2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்

அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது 2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரகுபதி தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். பாக்கியலட்சுமி பியூட்டிஷியனாக வேலை பார்த்துள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு அலங்காரம் செய்வது மற்றும் மெஹந்தி வைப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்துள்ளார். இந்நிலையில் ரகுபதி […]

ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் உத்திராபதி […]

அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்ட‌மன்ற‌ தொகுதிகளிலும் இறந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக […]

அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1988 ஆம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் அரசு நடுநிலைப் […]

ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுபம் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் ரூ.662.29 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1302 பயனாளிகளுக்கு […]

அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினமான இன்று, மாவட்ட தலைநகர் அரியலூரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சார்பாக அரியலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து சங்கத் தலைவரும் உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளர் தோழர் டி தண்டபாணி தலைமையில் நகராட்சி ஏ ஐ டி யு சி செயலாளர் ரெ. நல்லுசாமி, செ […]

ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் ‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், இன்று 6500 சதுர அடி பரப்பளவில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டினார். இந்த சிறிய […]

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் […]

அரியலூரில் ‘கலைஞர் அறிவாலயம்-5ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

அரியலூர் நகரில் புறவழிச் சாலையில் வருகிற ஐந்தாம் தேதி அரியலூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம் அரியலூர் ரிதன்யா மஹாலில் நடைபெற்றது.போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, அரியலூர் மாவட்ட கழகத்தின் நீண்டகாலக் கனவான ‘கலைஞர் […]

102-வது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர்-இளமையின் ரகசியத்தை உடைத்த தாத்தா

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் பெரிய ஆனந்தவாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 1924 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது 101 வயதை நிறைவு செய்து, 102-வது வயதில் நேற்று அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி ராமசாமியின் பிறந்தநாளை அவரதுமகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தனர். தாத்தாவின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்த பேரக்குழந்தைகள், நேற்று மாலை தங்களது வீட்டிற்கு முன் கேக்கை தாத்தாவை […]

அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, நேற்று மாலையில் அரியலூர் – செந்துறை சாலையில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். தனியார் ( ராம்கோ) சிமெண்ட் ஆலை அருகே ஆடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தபோது, சிமெண்ட் ஆலையிலிருந்து கிளிங்கர் ஏற்றிக் கொண்டு, சேலம் சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத வகையில் செம்மறி ஆடுகள் மீது மோதியது.இதில் கருப்பையாவுக்கு […]

நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் வந்து பணத்தை பறித்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது […]

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய – மாநில அரசுக்கு எதிராக […]

அரியலூர்- மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதனையொட்டி கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று அரியலூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் மற்றும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து குருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுடன் சிறியவர்கள், பெரியவர்கள், கன்னிசாமிகள் என திரளான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். […]

அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பில் சட்டி, பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை, அரசு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் வழங்கல் துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டை காரர்களுக்கு வழங்கி வருகிறது. பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டு வருகிறது. […]

அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் வந்தவர் பின்பு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று தா பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராம்குமார் தலை மற்றும் முகம் நசுங்கிய நிலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து […]

ஜெயங்கொண்டம்…பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை மூலவரான பிரகதீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 320 லிட்டர் பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பின்னர் பெருவுடையாருக்கு மாலை சாத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அபிஷேகம் நிறைவடைந்த பின்னர் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட பெருவுடையாருக்கு […]