வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் – 2 பேர் காயம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது.இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி விமானத்தை உடனடியாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால், விமானம் விஜயவாடா அருகே உள்ள கிராமத்தின் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 2 […]
ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கொள்கலன் லாரி மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த […]
ஆந்திராவில் சமூக வலைதளத் தடைச் சட்டம்? ஆஸ்திரேலியா பாணியில் அரசு அதிரடி ஆய்வு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பின்பற்றி, ஆந்திர மாநிலத்திலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து ஆந்திர மந்திரி நரா லோகேஷ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் இந்தச் சட்டம் குறித்து ஆந்திர அரசு ஆய்வு செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார்கள் தாங்கள் எதைப் பார்க்கிறோம் என்பதைப் […]
தூக்க மாத்திரை கலந்த பிரியாணி… விடிய விடிய ஆபாச வீடியோ: கணவரைத் தீர்த்துக்கட்டிய கள்ளக்காதல் ஜோடி
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சிவ நாகராஜு (45), அவரது மனைவி லட்சுமி மாதுரி (37) மற்றும் கள்ளக்காதலன் கோபி ஆகியோரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்தபோது கோபியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட லட்சுமி மாதுரி திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு, கணவருக்கு ஆசையாகப் பரிமாறிய பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். சிவ நாகராஜு […]
ஒரே நாளில் ₹27.68 கோடி வருவாய்: ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் வரலாற்றுச் சாதனை
ஆந்திர மாநிலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சங்கராந்தி பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பிய நிலையில், ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) வருவாயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜனவரி 19-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, போக்குவரத்து வரலாற்றிலேயே ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் […]