திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளைபுதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும். […]

எடப்பாடிக்கு முதல்வர் நாற்காலி கேள்விக்குறி” – வைகோ

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சூரியன் எப்போதும் மறையாது என்றும், திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய வைகோ, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க-விற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் […]

மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் – ஈபிஎஸ்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு […]

திருச்சியில் நாளை சந்திக்கும் அமித்ஷா – ஈபிஎஸ்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், கூட்டணிகளை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அமித்ஷா வருகையும் புதுக்கோட்டை விழாவும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், இரண்டு நாள் பயணமாக அந்தமான் […]

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை…எதிரியும் இல்லை… நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம். வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய […]

மதுரையில் 17ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முன்மொழிவைக்கூட இந்த திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை. வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீத வரி உயர்வு […]

நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம்

தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 10) கூடுகிறது. கே.ஏ. செங்கோட்டையன் போன்ற முக்கியப் பிரமுகர்கள் விலகிய நிலையில், கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த கூட்டத்தில் என்னென்ன முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் தாக்கினார். “விவசாயிகளின் நெல் ஈரப்பதத் தளர்வு கோரிக்கைக்காக பிரதமரைச் சந்திக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல ஏ.சி. கார் தந்து டெல்லிக்கு அனுப்பி […]

நான் எப்போதுமே விவசாயிதான் – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை. முறையாக கொள்முதல் செய்திருந்தால் நெல் ஈரப்பதம் பிரச்சனை வந்திருக்காது. நெல்லை எடைபோட போதிய ஆட்கள், போதிய வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை. அரசு காட்டிய நெல் கொள்முதல் தாமதத்தால் தான் இப்போது விவசாயிகள் தவிக்கிறார்கள். நெல்கொள்முதல் விவகாரம் […]

எடப்பாடி பழனிசாமி ஜி.கே.வாசன் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.கே.வாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.