ஐநா விருது பெற்ற சுப்ரியா சாகுவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரியா சாகுவுக்கு, ஐ.நா.வின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்’ (Champions of the Earth) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகச் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.இயற்கைப் பாதுகாப்புப் பணிகளில் அவர் ஆற்றிய அயராத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் […]