சென்னை மெரினாவில் குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை: முப்படை வீரர்கள் அணிவகுப்பு

நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவிற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று […]