பத்திரப்பதிவில் அசல் ஆவணம் கட்டாயம்.. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும் […]

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்- ஜன.,12 முதல் அமல்

ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. டிசம்பர் 29 முதல் நேரக் கட்டுப்பாடுகளுடன் ஆதார் இணைப்பு சரிபார்க்கப்படும். ஜனவரி 12 முதல், ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.