திருமணமான ஒரே மாதத்தில் விபரீதம்: கணவரைப் பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்தி (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே உறவுக்கார இளைஞர் ஒருவருடன் காதலில் இருந்த நித்தி, திருமணத்திற்குப் பின்னரும் அந்த உறவைத் தொடர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த நித்தி, தனது காதலனுடன் குவாலியர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, அவரைத் திருமணம் செய்துகொண்டு […]