கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் […]

பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று புத்தூர் நான்கு ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சண்முகாநகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ;-திருச்சி மாநகராட்சி சார்பில் […]

பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 சட்டதொகுப்பாக மாற்றிய ஒன்றிய பா.ஜக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் மாவட்ட கவுன்சில் செயலாளர் கி.கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் அ.ரெத்தினம், மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர்பி. சண்முகம், துணைச்செயலாளர்கள் எஸ்.அருள்ஞானசேகரன், எம்.நாகராஜன், போக்குவரத்து தொ.மு.ச.பொதுச்செயலாளர் மு.வேலுச்சாமி ,தலைவர் ஆ.அடைக்கலம், பொருளாளர் சி.கோபாலன் உள்ளிட்ட தொ.மு.ச.வினர்பங்கேற்றனர். புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 […]