மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் (Bharat Innovative Glass Technologies Private Limited […]