கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசுகையில்; கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ ஆதாரத்துடன் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]

கரூரில் 4 கோடி மதிப்பில் 17 புதிய பணிகளை VSB துவங்கி வைத்தார்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்றத் தொகுதி, தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டேட் […]

கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு கல்லூரிகளில் கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை என்றும், தகுதியுடன் […]

கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை நீண்ட நேரம் நோட்டமிட்டுள்ளனர். சமயம் பார்த்து அவர்களில் ஒருவன் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே பையில் […]

கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம்

கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம் – இயக்குனர் ராஜு முருகன் தனது பிறந்த நாளை திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார். ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார், நடிகை சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள “மை லார்ட்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம், அரசு ஆவணங்களில் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்கள்’ என பதிவாகும் நபர்கள், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கு ஏற்பட்ட […]

கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு

கரூர், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல்துறையினர், பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு விளக்கு (Red Reflector) அல்லது பிரதிபலிப்பு ஸ்டிக்கர் இல்லாமல் சென்ற வாகனங்களை கண்டறிந்தனர். அவ்வாறான வாகனங்களில் உடனடியாக சிவப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கினர்.மேலும், நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை […]

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலராக (VAO) சிவக்குமார் (48) என்பவர் பணியில் சேர்ந்தார். பெயர் மாற்றத்தைச் செய்து தர சிவக்குமார், விவசாயி சின்னத்துரையிடம் 10,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்துரை, இது குறித்து […]

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பசுபதி செந்திலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பசுபதி […]

கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு, அங்குள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், […]

கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்

கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ம் தேதி 73ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூர் மாவட் ட திமுக சார்பில் வெங்கமேடு பகுதியில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் […]

தமிழக அரசின் 5000 அறிவிப்பு.. கரூரில் திமுக கொண்டாட்டம்

மகளிர் உரிமைத்தொகை ரூ 5 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கரூரில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்… திமுக அரசின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில், இன்று ரூ 5 ஆயிரம் அரசு வங்கி கணக்கில் செலுத்தியது… இதனால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள கிராமப்புற மகளிர் தமிழ்நாடு முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில், கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள […]

கரூரில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர திமுக சார்பில் நிதி இல்லை 100 நாள் வேலை இல்லை ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி .மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மேற்கு மண்டல பொறுப்பாளர்கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி MLA அறிவுத்தின்படிமாநகர செயலாளர் கனகராஜ்மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் மணிராஜ் முன்னிலை.மாபெரும் […]

மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் ‍, நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற […]

கரூரில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, லிங்கமநாயக்கம்பட்டி, சாந்தப்பாடி, இனங்கனூர், சேந்தமங்கலம் மற்றும் ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்டிப்பட்டி கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ–மாணவிகளுக்கு நான்காவது முறையாக சுமார் 23 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய கழகச் செயலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு […]

கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தை நோக்கி மாட்டுவண்டி தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது. கரூர்-கோவை […]

அதிமுக நிர்வாகி டிரைவர்கள் மீது தாக்குதல்- லாரி உரிமையாளர் குற்றச்சாட்டு

கரூரில் கோவில் கட்டுமானத்திற்கு பட்டா நிலத்தில் மணல் எடுத்து தர வேண்டும் என்று கூறிவிட்டு, அரசியல் காரணத்திற்காக சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக அதிமுக ஒன்றிய செயலாளர் செயல்பட்டதாகவும், ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம், நெரூர் அருகே மல்லம்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதாக டிப்பர் லாரிகளையும், ஹிட்டாச்சி வாகனங்களையும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சிறை பிடித்தார். மேலும், மாவட்ட ஆட்சியருக்கும், […]

கரூரில் நாதக பொதுக்கூட்டம்.. தவெகவை சரமாரி விளாசிய சாட்டை துரைமுருகன்

கரூரில் 41 பேர் உயிரிழந்த அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் – சாட்டை துரைமுருகன் தவெக மீது கடும் விமர்சனம். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் […]

அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி

கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் கரூரில் பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்தில் திடீரென ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது குறித்தான பயிற்சி கரூர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீயணைப்பு துறை உதவி […]

கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வால்வு பகுதியிலிருந்து குடிநீர் கட்டுப்பாடின்றி வெளியேறி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் சாலையில் […]

கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று சிறப்பான கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் தாய் கழகங்களிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்று, திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டத்தின் முக்கிய திமுக நிர்வாகிகள் […]

கரூர்- 2 போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் துயர சம்பவம்: இரண்டு போக்குவரத்து காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போக்குவரத்து காவலர்கள் மற்றும் […]

கரூர்- என்டிஏ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு- பரபரப்பு

கரூரில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கரூர்–கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கரூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், […]

அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில் சாலை மறியல் போரட்டம்- 200 பேர் கைது

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசே கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பின் சார்பில், வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் பென்சன் ரூ 6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ 19,500/ சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலை […]

கரூர்.. சிபிஐ விசாரணைக்கு 2 பேர் ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் ஒரு பொதுமக்கள் என 2 பேர் இன்று சிபிஐ விசாரணைக்காக தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு […]

கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். கரூர், ஜவகர் பஜார் பகுதியில் கைராசி ஜூவல்லர்ஸ் என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தரை பூர்வீகமாகக் கொண்ட கந்தசாமி என்பவர் இந்த நகைக்கடையை நடத்தி வந்துள்ளார். கரூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளது. கரூர் நகரம் […]

கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தற்போது […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் – 148 பேர், வெண்ணைமலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி – 80 பேர், சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி – 8 பேர், கோடங்கிபட்டி ச க்தி நர்சிங் பெண்கள் […]

அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னதாக, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் […]

ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச் சிலை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களால் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசலிங்கேசுவரர் சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு […]

கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முருகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அளவில் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து […]

டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்

கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளார். கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(57) என்பவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி (49), நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை பூர்வீகமாகக் கொண்ட ராஜமாணிக்கம் […]

கரூர் கல்யாணவெங்கட்ரமண கோவில் கும்பாபிஷேகம்- VSB பங்கேற்பு

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா: தமிழில் மந்திரம் ஓதி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கலசத்தினை சிவாச்சாரியார் மேலத்தலங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு […]

வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பசுபதிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கரூர் அரசு […]

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் இரண்டு காவலர்கள், இரண்டு பொதுமக்கள் என நான்கு நபர்கள் விசாரணை ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா […]

ஆறரை மணி நேரத்தில் 33 நிகழ்ச்சிகள்- VSB சூறாவளி

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் புது குடியிருப்பில், புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 33 நிகழ்ச்சிகளில் பங்கேற்று செந்தில்பாலாஜியின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை துவங்கி வைத்து வருகிறார். அதன் பகுதிகளான காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம், கவுண்டாயூர் மற்றும் குப்புச்சிபாளையம் பகுதிகளில், காவிரி குடிநீர் விநியோகம், காதப்பாறை ஊராட்சி, கவுண்டாயூர் பகுதியில், 1 […]

கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மஞ்சுவளி சவுக்கத் அலி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தொழில் காரணங்களால் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், தங்களுக்குச் சொந்தமான 150 ஆண்டு பூர்வீக நிலத்தை பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்களின் நலனுக்காக மகளிர் பூங்காவாக அமைத்து வழங்க […]

கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது. EX.Mp ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றுகிறார். கழக அமைப்புச் செயலாளர் டான் அசோக் , தி. பிரபு தலைமைக் கழக பேச்சாளர் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்திற்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் […]

கரூர்- 4 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நான்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தின் போது பாதுகாப்பு […]

கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு. 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கரூரில் மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினர். இதன் மூலம் பொதுமக்களிடையே […]

கரூர் விபத்து வழக்கு: டெல்லியில் விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல்முறையாக […]

குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே வந்த போது நேற்று இரவு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் ஏற்றி வந்த குப்பைகள் அனைத்தும் கரூர் மாநகர […]

கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களின் விசார ணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி கள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங் கிய உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.இந்நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர் பாக, சி.பி.ஐ., அதிகாரி களின் […]

கரூரில் போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியைசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கொடியைசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன […]

கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ மாற்றப்பட்டு கரூர் தான்தோன்றி மலை […]

கரூர் திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று காலை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து கரும்புகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் திமுக அலுவலகம் முன்பு வண்ணம் கோலம் வரைந்து பொங்கல் […]

கரூர் சம்பவம்.. 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக 19ம் தேதி விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கடந்த […]

கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

டில்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு: நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளும் கூறினார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கரூர் தான்தோன்றி மலைப் […]

கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் சம்பவத்துடன் தொடர்புடைய பல தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் பணியில் […]

சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

கரூரில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் இரு சக்கர […]

நயினாருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… VSB பதில்

கரூர் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்து நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் தான்தோன்றி மலையில் […]

ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு பணிகள், வார்டு எண் 1ல் திருவள்ளுவர்நகர் கோதூர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சின்ன கோதூர் வடக்குத் தெருவில் சின்டெக்ஸ் டேங்கஅமைக்கும் பணி, மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி,வார்டு எண் 1ல் என்.எஸ்.பி நகரில் மயாளத்திற்கான […]

கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி-சேலை ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிரமமின்றி பரிசுத்தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய, டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள 3,33,503 குடும்ப அட்டைதாரர்களுக்கு […]

கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் ஜி ஜெயந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்றுவிட்டு, தற்போது நொய்யல் பகுதியில் உள்ள ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் ஜி ஜெயந்த், கடந்த சில நாட்களாகவே தனது பெற்றோரிடம் பாடம் படிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி மன […]

கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்குகரூரில் திமுக சார்பில் மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டும், தமிழர் வீரத்தின் அடையாளமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகர பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் […]

கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக புகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி விதிகளை மீறி சில கல்குவாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சதீஷ்குமார் நிறுவனத்தால் 1.46.25 […]

கரூர் மாயனூர் காவிரி கதவனுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம், கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 10,441 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 11,760 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதில் 11,240 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 400 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 50 கன அடியும், […]

கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.சிபிஐ விசாரணையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, போனில் அழைத்து வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் […]

கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் காப்புக்காடுகள் மற்றும் காப்புக்காடுகளுக்கு வெளியிலும் ஏராளமான ஈரநிலங்கள் உள்ளன. இதில் நீர்நிலைகள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் அடங்கும். இவ்வகை ஈரநிலங்களில் பல்வேறு பறவை இனங்கள் தங்கியிருப்பதோடு, பருவகாலங்களில் இடம்பெயர்ந்து வருவதும் வழக்கமாக உள்ளது. அரிய மற்றும் அழிவின் விளிம்பில் […]

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ தலைமையகத்தில் டிசம்பர் 29-ஆம் […]

கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு சர்க்கஸ் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்காகத் தங்களது ஒட்டகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாகத் திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக இரண்டு ஒட்டகத்தை அழைத்துக்கொண்டு கரூர் வழியாகப் […]

தவறவிட்ட ரூ.15000 மதிப்பிலான வௌ்ளி கொலுசு-வாட்ஸ்அப் குழு மூலம் மீட்பு

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகரில் பள்ளிக்குச் செல்லும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தான் அணிந்திருந்த சுமார் ரூ.15,000 மதிப்பிலான வெள்ளி கால் கொலுசை எதிர்பாராதவிதமாக வழியில் தவறவிட்டுள்ளார். இதைக் கண்டெடுத்த அப்பகுதியைச் சேர்ந்த காஜா என்ற நபர், அதனை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணி ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழு அட்மின் அபுதாகிர் இடம் வழங்கினார். சுமார் 15,000-க்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு இயங்கி வரும் ‘பாப்புலர் எக்ஸ்பிரஸ்’ குழு உடனடியாக இந்தத் தகவலைத் தனது அனைத்து வாட்ஸ்அப் […]

கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார்: கரூர் மாவட்ட திமுக சார்பில் செந்தில் பாலாஜி வழங்க உள்ளார் என்று தெரிவித்தனர். கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் ஆர்.டி மலை கிராமத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் […]

கரூர் அருகே பெண்மணியை அடித்து தாக்குதல்- கலெக்டரிடம் புகார்

கரூர் அருகே பண தேவைக்காக நிலத்தினை கிரையம் வைத்து கடன் வாங்கிய பிரச்சனையில் பெண்மணியை அடித்து கீழே தள்ளிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த வைரமடை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் . ரேவதி தனக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை பண தேவைக்காக கருக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜா மணி என்பவரிடம் […]

கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 4 -வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கை பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் தேவி தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதில் குறிப்பிட்டதை போல அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு […]

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். 110 நபர்கள் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு […]

கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு. வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து இரண்டாம் நாள் சாமி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் […]

கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் . இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிகமாக சிபிஐ அலுவலகத்தில் […]

கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மின்சார சிக்கன வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் கோவை சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து துவங்கிய விழிப்புணர்வுப் பேர ணியை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் […]

கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தனது இடம் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஜீவசமாதி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். 45 ஆண்டுகளாக சாமியாராக இருந்த மாணிக்கவேல் உடலை ஜீவசமாதி செய்ய விடாமல் செய்ததால் […]

ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

கரூர் அருகே அய்யம்பாளையத்தில் இரவு நேரத்தில் ஆடு மற்றும் கோவில் உண்டியல் திருட காரில் வந்தால் நான்கு பேர்,இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு. இருவர் காரில் தப்பி ஓட்டம். கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் மக்கள் உறங்கும் சமயத்தில் காரில் வந்த நான்கு மர்ம நபர்கள், பட்டியில் இருந்த ஆடுகள் மற்றும் பிள்ளையார் கோவில் உண்டியலை திருடவும் முயற்சித்துள்ளனர். அப்பொழுது சத்தம் கேட்டு, […]

கரூர் கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில் பிரதோஷ விழா.. குவிந்த பக்தர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷ விழா: இந்த ஆண்டின் இறுதி பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண் ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், […]

கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் அலங்காரத்தில் காட்சி. மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பண அலங்காரம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக […]

கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000 ஆண்டு பழமையான சங்கரன்மலைப்பட்டியில் மலை உச்சியில் சௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. […]

கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர்,பகவதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன் பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க ஆலயத்தில் கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்று […]

கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து கடந்த 28.02.2011 பணி ஓய்வு பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், நெய்தலூர், ராஜன் நகர் பகுதியில் இறந்துபோன தனது அப்பா இருளன் பெயரில் இருந்த காசி ரைஸ் பிளவர் மற்றும் ஆயில் மில்லிற்கு மின் இணைப்பு S.C.No.247 உள்ளது எனவும், அந்த மின் இணைப்பிற்கு வரும் ஒயர் மின் கம்பத்திலிருந்து ரைஸ் மில் வரை தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருந்ததால், மின் […]

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று உரிமை மீப்பு உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரை அடுத்த தாந்தோன்றிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்புறம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு […]

கரூர்-பாலியல் ரீதியாக திட்டியதாக கல்லூரி பேராசிரியர் மீது புகார்

கரூர் அரசு கல்லூரி பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக திட்டியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த மாணவி – கல்லூரி வாயில் முன்பு சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தலைமுடியை பின்னலிடாமல் வந்ததால் மாணவியை பேராசிரியர் ஜாஹிர் ஹீசைன் என்பவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேராசிரியர் தன்னை […]

கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

கரூர் சட்டமன்ற தொகுதி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 123 மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், 80 பத்தாம் வகுப்பு மற்றும் 126 பன்னிரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு, பொது தேர்வை எளிதாக அணுகும் வகையில் பெரிதும் பயன்படும் வினா-விடை புத்தகங்களையும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வழங்கினார். இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்..

கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார் . அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒன்றாக டீ- கூல்ட்ரிங்ஸ்- ஸ்னாக்ஸ் அருந்திய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி.

பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

பள்ளப்பட்டி பகுதியில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி இ.பி. அலுவலகம் முன்புறம் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் தொடர்ந்து நிரம்பி சாலைப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் நாள்தோறும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த ஒரு வருடமாக நீடித்து வரும் இந்த பிரச்சினையைப் பற்றி பலமுறை மனு அளித்தும், எந்த தீர்வும் […]

கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகரிகள் இன்று மேலும் பலரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்நேற்று சிபிஐ அலுவலகத்தில் காயமடைந்த நபர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அரசு மருத்துவர்கள் என சுமார் 9 நபர்களிடம் விசாரணைக்கு ஆஜராகினர். இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கூட்ட நெரிசலில் காயம் அடைந்த நான்கு பேர் மற்றும் உடல் […]

“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு வழித்தட ங்களில் பேருந்துகள் சென்று வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்கமாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். சமீபகாலமாக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக (Rapido) பைக் புக் செய்து பயணம் […]

ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று நொய்யல் ரயில்வே பாதை அருகே காலை உபாதைக்காகச் சென்றுவிட்டு, பாதையைக் கடக்க முயன்றார்.அப்போது, எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் அவர்மீது மோதியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் வேகமாக நகர முடியவில்லை. ரயில் மோதியதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் ஓட்டுநர்கள் அளித்த தகவலின் பேரில், […]

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிகளின் வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், மின்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், […]

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 10 லட்சம் 5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும் தமிழகத்தில் உள்ள […]

கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். இன்று சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பா ல், தயிர், […]

14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கரூர் மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் இடத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கோபால் நுழைவு வாயில் முன்பு தான் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ய்யை ஊற்றி தீ குளிக்க முயன்றார் அங்கு இருந்த போலீசார் கோபலை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றார். இது குறித்து கோபால் கூறியதாவது: […]

ஈபில்லிங்-ஐ ரத்து செய்ய கோரி கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈபில்லிங் முறையை ரத்து செய்யக்கோரி கரூர் நீதிமன்றம் முன்பு வழகறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், தான்தோன்றி மலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஈபில்லிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் 08.12.25 முதல் 12.12.25 வரை பணியை புறக்கணிப்பு செய்துவழக்கறிஞர் சங்க செயலாளர் நகுல்சாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனுபவமில்லா ஊழியர்களால் பல்வேறு […]

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு […]

கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

கரூர் மாநகராட்சிக்கு திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி ஸமேத ஸ்ரீ திருமாலீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு மூன்று கால யாக பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக புனித தீர்த்தத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி […]

கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் திருச்சி செல்லும் சாலையில் தெற்கு நரசிம்மபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடத்தில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தில் திடீரென […]

வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(36). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார்.மகாதானபுரம் வடக்கு விஏஓ பிரபு(46) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் […]

போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள் உள்ளே சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தையே சுற்றி சுற்றி வந்த நாய் ஒன்று மது போதையில் இருந்த நபரை பார்த்து குரைத்துள்ளது. கோபமடைந்த மது போதை ஆசாமி நாயைப் பார்த்து உன்னை கொன்று விடுவேன் என்று திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]

5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் இன்று கரூர் அரசுமருத்துவமனைக்கு உட்பட்ட 5 அரசு மருத்துவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆவணங்களுடன் ஆஜராகினர். இவர்கள் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறு (போஸ்ட் மார்டம்) ஆய்வு செய்ததும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததும் உள்ளிட்ட முக்கிய காரணங்களை விசாரிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் […]

கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் […]

கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம், அதன் நிலையான மேலாண்மை, அரிப்பைக் குறைத்தல், மண் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால உணவுப் பாதுகாப்பிற்காக மண்ணைப் பாதுகாப்பு, மண் ஆரோக்கியத்தைப் பேணுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் அமைந்துள்ள […]

கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கக்கூடிய நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது என சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது. தேர்தல் வாக்குறுதி படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறையில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7வது ஊதிய குழுவில் நிதி பலன்களை அரசின் […]

சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில் ஆய்வு செய்தனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. […]

கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள […]

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம் அதனை தொடர்ந்து இன்று குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது தெரு நாய்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் செல்லும் சாலையில் சுற்றி திரிகிறது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட […]

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரெத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட புகழ்பெற்ற சிவஸ்தலமாகும். மலை உச்சியின் மேல் அமையப் பெற்ற இந்த சிவஸ்த லத்தில் ஆண்டுதோறும் […]

செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செங்கோட்டையன் இரண்டு நாட்களுக்கு முன்பு யார் முதல்வர் ஆவார் என்று சொன்னார். இப்போது யார் முதல்வர் ஆவார் என்று சொல்கிறார். அது அவருடைய கருத்து. அதிகமாக அது குறித்து பேச […]

சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16 வயது சிறுமி ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை மாணவியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் மாணவியின் வீட்டிற்குச் சென்ற வசந்த் குமார், இருவரும் தற்கொலை […]

கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து கரூர் சுற்றுலா மாளிகையில் தாங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவலர்கள், கூட்ட நெரிசலில் […]

கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்ந்து கடந்த மாதம் 19 ஆம் தேதியில் இருந்து கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக த.வெ.க பொறுப்பாளர்களான துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த்,தேர்தல் வியூக […]

கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

கரூரில் கிஃப்ட் ஷாப் ஒன்றில் 80 ரூபாய்க்கு பொருள் வாங்க வந்து 200 ரூபாய் பொருளை திருடி சென்ற பெண்மணி – சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரூர், வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் அருகில் தனுஷ் என்ற இளைஞர் கிப்ட் ஷாப் வைத்துள்ளார். நேற்று மாலை அந்தக் கடைக்கு வந்த பெண்மணி ஒருவர் 80 ரூபாய் மதிப்புள்ள பொருள் ஒன்றை கேட்டுள்ளார். கடையின் உரிமையாளர் தனுஷ் மற்றும் பணியாளர் இருவரும் அந்த பொருளை […]

கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110 படி சுகாதாரப் பணியாளர் நியமனம் பெற்று கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.3000 பெற்று பணிபுரிந்து வந்துள்ளார். நிரந்தர பணி வழங்க கடந்த 2021ம் ஆண்டு பல மனுக்கள் பரிந்துரை கடிதங்கள் பெற்று […]

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி என 4 பேர் விசாரணைக்காக ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் […]

கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,821 கன அடி தண்ணீர் வந்து […]

கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கோடங்கிபட்டி தனியார் மகளிர் கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் […]

TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

V செந்தில்பாலாஜி அறக்கட்டைளை சார்பாக, TNPSC குரூப் 4க்கான, இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் பயில, ஆர்வமுள்ளவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி பயன்பெற வேண்டுகிறோம். கடந்த குரூப் 4 தேர்வில் பயின்ற 500க்கும் மேற்பட்டோரில், ஒருவர் நிச்சய அரசு பணிக்கும், மற்றொருவர் கவுன்சிலிங் வாய்ப்பும் பெற்றுள்ளார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலர் பிராபகரன். இவர் தற்பொழுது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார் இந்நிலையில் இன்று தனது சிறு வயது மகனுடன் கரூர் வெண்ணெய் மலை முருகன் கோயிலுக்கு வந்தார். அப்போது கோவில் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்து யாசகம் எடுக்க முயன்றார். இதனை அப்பகுதியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து பிரபாகரனை சமாதானம் செய்தார். அப்போது பிரபாகரன் காவல்துறையிடம் காலில் விழுந்து கதறி […]

கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை இராதாகிருஷ்ணன் பேட்டி. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சார்பாக சிலர் இப்பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் […]

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, […]

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர். கரூர் மாவட்டம், வெள்ளியணை பேருந்து நிறுத்தம் பின்புறம் 700 ஆண்டு பழமையான அருள்மிகு பிரசன்ன கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் அர்ச்சகர் பூஜை செய்வதற்காக […]

கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள், மின்வாரிய அதிகாரிகள், ஆம்புலன்ஸ் […]

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் சுற்றுலா மாளிகையில் […]

வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி செலுத்தினார். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.கரூர் மாவட்ட வ உ சி பேரவை தலைவர் மகேஸ்வரன் தலைமையில் […]

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பொடி, அரிசிமாவு, […]

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த கடை வாசலில் படுத்து உறங்குவது போல, அவர் அணிந்திருந்த பையில் வைத்திருந்த மர்ம பொருளை வைத்து, ஒரு பக்க பூட்டை திறந்துள்ளார். கடையின் ஷட்டரை லேசாக திறந்த அந்த […]

கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர், வேலுச்சாமி புரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் […]

கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200 க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு 62 […]

உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிந்துள்ளனர். மேலும், அக்கிராமத்தில் உள்ள மாரப்பன் (50) என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி வனிதாவின் (38) 5 1/2 பவுன் தாலி செயினை திருடிச் சென்றுள்ளனர். அப்போது, அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி காட்சிகளை […]

கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.* ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாள் 1 மண்டலம் அல்லது 24 நாள் 1/2 மண்டலம் அல்லது 12 நாட்கள் 1/4 மண்டலம் என தங்களது விரதத்தை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக இருமுடி கட்டி கேரளாவில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று […]

கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கையில் கடப்பாறையுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். […]

கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பேட்டி. கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டி கரூர் […]

கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி கடந்த 19ஆம் தேதி முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை வேலுச்சாமிபுரம் பகுதியில் வசித்த பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் […]

கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். நாளை ஆண்களுக்கான சிலம்பப் போட்டி நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பப் போட்டியில் 14,17,19 வயது மற்றும் பொது பிரிவாக போட்டிகள் நடைபெற உள்ளது முதல் பரிசு 25 […]

கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைத்தல், அரிக்காரம் பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணி, பெரிய குளத்து பாளையம் பகுதியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணி, நெரூர் நீரேற்று நிலையத்திலிருந்து பாலம்மாள்புரம் […]

கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். கரூர் […]

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்,தவெக வழக்கறிஞர், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். கரூர் […]

கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். […]

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி. மாவட்ட ஆட்சியர்.தங்கவேல் கொடியாசித்து துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பேரணி தொடங்கப்பட்டு அரசு கலைக்கல்லூரி வரை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மழைநீரைச் சேகரித்து, முறையாகச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்தலாம். விவசாயம்: […]

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனத்திலிருந்து 2 அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜாராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச […]

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்போது, தெருநாய்கள் குரைத்துக்கொண்டே துரத்துகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, சாலைகளில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர்களை தெரு நாய்கள் அடிக்கடி கடிக்க துரத்துவதாகவும். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த கரூர் […]

கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

கரூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் 3 மையங்களில் 2,240 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. கரூரில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேரன் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 3 மையங்கள் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி […]

KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்CII மற்றும்யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்த மாரத்தானின் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் போட்டியும், வாக்கத்தான் போட்டியில் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. வாக்கத்தான் போட்டியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் […]

கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தனி நபர்கள் பெயருக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தாந்தோன்றிமலை கோவில் மற்றும் ஏமூர் கிராமத்தில் சிவனடியார்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பூஜை காரியங்கள் மற்றும் சேவை இனங்களுக்கு வழங்கப்பட்ட மானிய நிலங்களை, […]

கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 11 பேர் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் என நேற்று ஆஜரான இரண்டு பேரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. மேலும் ஆறு பேர் இன்று விசாரணை ஆஜராகினர். இன்று ஒரே நாளில் 8 பேரிடம் சிபிஐ […]

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,போசன் டிராக்கர் செயலியில் முக அங்கீகாரம் (Face Recognition) பதிவேற்றம் செய்வதை அங்கன்வாடி ஊழியர்களை கட்டாயப்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் […]

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கரூரில் கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சம்மன் […]

கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கரூரில் சிபிஐ விசாரணை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பி இதுவரை 25க்கும் […]