ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் சுசித்ரா (33) தனது கணவர் சுரேஷுடன் துமகூரு டவுனில் வசித்து வந்தார். சமீபத்தில் சுசித்ரா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்கச் சென்றபோது, அந்த ஜோதிடர் சுசித்ராவின் தந்தையின் மரணத்திற்கு அவரது தாய் புஷ்பலதா செய்த மாந்திரீக பூஜையே காரணம் எனத் தவறாகக் கூறியுள்ளார். இதை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது தாயின் […]

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..

கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர் – மைசூரூ சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.