களக்காடு தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் […]