காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு வினோதமான மோதல் அரங்கேறியுள்ளது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அவர்கள் மீரட் […]

கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்

பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், […]